மாநில செய்திகள்

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு + "||" + Cable TV Extend the time limit until March 31 to implement the new tariff rules

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

கேபிள் டி.வி.க்கான இணைப்பில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்து அதற்குரிய கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை பிப்ரவரி 1ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், சேனல் தேர்வு செய்வதற்கு காலஅவகாசம் வேண்டும் என சந்தாதாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  அவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்படுகிறது என டிராய் அறிவித்துள்ளது.  இதனால் கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.