உலக செய்திகள்

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலி + "||" + Pakistan: Five policemen killed in terror attack

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலி

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலியாயினர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் போலீசார் ரோந்து வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 போலீசார் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட டேரா இஸ்மாயில் கான் மாவட்டம், பேஹ்ரோ பகுதியில் போலீசார் ரோந்து வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிக்சூடு தாக்குதல் நடத்தினர்.


இந்த சம்பவத்தில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்தில் கூடுதலாக போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது - ஷேவாக் கணிப்பு
பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
2. போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது
போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
3. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 3 ராணுவ அதிகாரிகள் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 ராணுவ அதிகாரிகள் பலியாகினர்.
4. "பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்" - பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு
காஷ்மீர் உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி உள்ளார்.
5. பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்பு அமைத்து கொடுத்த துபாய் இந்தியர்
துபாய் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானில் 62 தண்ணீர் பம்புகள் அமைத்து கொடுத்துள்ளார்.