தேசிய செய்திகள்

கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல் + "||" + Attractive Bill to ban fraudulent investment plans - Tabled in Parliament

கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல்

கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல்
கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,

கவர்ச்சிகரமான வட்டி அளிப்பதாக கூறும் மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா, மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பதுடன், மோசடி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் அளிக்க வகை செய்கிறது. மேலும், அவர்களின் சொத்துகளை பறிப்பதற்கும் இதில் இடம் உள்ளது.


ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கும் மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது. இம்மசோதா, இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.