தேசிய செய்திகள்

ஜனநாயகத்தை வலியுறுத்தி மம்தா பானர்ஜி எழுதிய கவிதை - பிரதமர் மீதும் தாக்குதல் + "||" + Mamta Banerjee's poem to inspire democracy - the attack on the Prime Minister

ஜனநாயகத்தை வலியுறுத்தி மம்தா பானர்ஜி எழுதிய கவிதை - பிரதமர் மீதும் தாக்குதல்

ஜனநாயகத்தை வலியுறுத்தி மம்தா பானர்ஜி எழுதிய கவிதை - பிரதமர் மீதும் தாக்குதல்
ஜனநாயகத்தை வலியுறுத்தி மம்தா பானர்ஜி எழுதிய கவிதையில், பல வரிகளில் பிரதமரை தாக்கி உள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடைபெற இருக்கும் தேர்தலில் பிரமாண்ட எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்து வருகிறார். அவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு பாடல் உள்பட பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் பங்கேற்க புறப்படும் முன்பு 18 வரிகள் கொண்ட ஒரு கவிதையை சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.


ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்ற அந்த கவிதையில், “இன்றைய மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, எப்படி இந்த நடைமுறை ஜனநாயகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடிக்கும்” என்று கூறியுள்ளார். பல வரிகளில் பிரதமர் மோடியை தாக்கியுள்ளார். அவரது இந்த கவிதை சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.