தேசிய செய்திகள்

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி + "||" + Most parties trust on tapping machines - interviewed by the Chief Election Commissioner

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன என தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.
அமராவதி,

ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று ஒருதடவை கூட நிரூபிக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.


நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர் அசோக் லாவசா மற்றும் உயர் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றுள்ளனர். மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆந்திர தலைநகர் அமராவதியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்த உறுதி பூண்டுள்ளோம். தவறு செய்யும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான அரசியல் கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. சில தரப்பினர்தான் உள்நோக்கத்துடன் சேறு வாரி இறைத்து வருகிறார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட முடிவு வெளியானது. அடுத்து வந்த டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வேறுவிதமான முடிவுகள் வெளியாகின. பிறகு எப்படி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மீது சேறு வாரி இறைக்கிறார்கள்?

ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று லண்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கூறினார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறப்பட்ட பத்திரிகையா ளர் சங்கங்கள், தங்களுக்கும், அதற்கும் எந்த சம்பந்த மும் இல்லை என்று கூறிவிட்டன.

எனவே, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நிகழ்த்த முடியும் என்று ஒருதடவை கூட நிரூபிக்கப்படவில்லை. எந்திரங்களின் செயல் பாடுகளை ஐ.ஐ.டி. இயக்குனர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு கண்காணித்து வருகிறது.

ஓட்டுப்பதிவு எந்திரங்க ளில் கோளாறு ஏற்படுவது வேறு, அவற்றில் முறைகேடு நிகழ்த்த முடியும் என்பது வேறு.

யாருக்கு வாக்களித்தோம் என தெரிவிக்கும் ஒப்புகை சீட்டுகளையும் ஓட்டு எண்ணிக்கையின்போது எண்ண வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதுதொடர்பாக, இந்திய புள்ளியியல் அமைப்பு மற்றும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் நிபுணர்கள் அடங்கிய குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பிறகு இதுபற்றி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சுனில் அரோரா கூறினார்.