தேசிய செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் + "||" + Defence Ministry: India signs contract for acquiring 72,000 Sig Sauer Assault Rifles for the Indian Army under fast-track procedures.

அமெரிக்காவிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

அமெரிக்காவிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்
அமெரிக்காவிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி,

அமெரிக்காவிடமிருந்து 72,400 நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சரியாக 12 மாதத்திற்குள் இந்த துப்பாக்கிகளை அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில் இது பற்றி மேலும் கூறும் போது, “

அமெரிக்காவின் சிக் சாவர் நிறுவனத்திடமிருந்து 7.62 மி.மீ. வகை நவீன ரகத் துப்பாக்கிகளை வாங்குவதற்காக அந்த நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.உடனடி கொள்முதல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், 72,400 நவீன ரகத் துப்பாக்கிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும்.ரூ.700 கோடி செலவில் இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 மாதங்களுக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தின் இஷாபூர் நகரிலுள்ள அரசுக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ரகத் துப்பாக்கிகள், களப் பரிசோதனையில் சரியான முறையில் இயங்காததால் அந்தத் துப்பாக்கிகளை ராணுவம் நிராகரித்தது.இந்த நிலையில், தற்போது அமெரிக்கத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.
2. அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய வாலிபர் பலி
அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய வாலிபர் ஒருவர் பலியானார்.
3. அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று வருகை தருகிறார்.
4. உலகைச்சுற்றி...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான வாலிபர் பலியானார்.
5. இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது - இங்கிலாந்து நாடாளுமன்ற குழு
இந்தியாவுடனான பெரும்பாலான உறவுகளை மேற்கொள்ள இங்கிலாந்து தனது வாய்ப்பை தவறவிட்டது என்று பிரிட்டிஷ் குழு தெரிவித்துள்ளது!!