தேசிய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் + "||" + Mamata Banerjee In Delhi For Opposition's Big Show Of Strength Today

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
புதுடெல்லி,

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று பிரம்மாண்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் இந்த மாபெரும் போராட்டத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில், கொல்கத்தாவில் மம்தா பனர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லிக்கு மம்தா பானர்ஜி வருகை தந்தார். முன்னதாக, டெல்லிக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி, “ அதிகாரத்திற்கு மீண்டும் வர முடியாது என்பதை மோடி அறிந்துள்ளார். இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். புதிய அரசை காண நாம் விரும்புகிறோம். நாடு மாற்றத்தை விரும்புகிறது. ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவைக் காண நாடே விரும்புகிறது” என்றார். 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தலைவர்களின் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடுகிறது.
2. மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் ஜூலையில் வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்
டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
5. டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.