தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 militants killed in encounter in J-K's Budgam district

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில்  உள்ள கோபல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களிடம் இருந்து  வெடி மருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த  சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை
இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
2. ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் இளைஞர்கள் அதிகமான அளவு கலந்து கொண்டுள்ளனர்.
3. சிஆர்பிஎப் வீரர் உடல் முன்பு நின்று செல்பி எடுக்கவில்லை: மத்திய அமைச்சர் கேஜே அல்போன்ஸ் விளக்கம்
சிஆர்பிஎப் வீரர் உடல் முன்பு நின்று செல்பி எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கேஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
4. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
5. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...