மாநில செய்திகள்

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு + "||" + Rs 2,000 special fund for poor families Against the notification Appeal to the Chennai High Court

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என கூறினார்.


 ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தடைசெய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்  முறையீடு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சட்டப்பஞ்சாயத்து அமைப்பை  சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியாக வழங்குவதை  தடை செய்ய வேண்டும்.  ரூ.2 ஆயிரம்  வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது சட்டவிரோதம் என கூறி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும். 

தொடர்புடைய செய்திகள்

1. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க தடை இல்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.