தேசிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் + "||" + CAG report on Capital Acquisitions in Indian Air Force has been tabled in Rajya Sabha, it also includes the details of Rafale deal

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான  சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை துணை நிதி மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் 141 பக்க அறிக்கையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்தும் தகவல் இடம் பெற்று உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிர்ணயித்ததை விட 2. 86 சதவீத குறைவான விலையிலேயே பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில்  முறைகேடு நடந்து உள்ளதாக  குற்றஞ்சாட்டி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் காகிதத்தில் விமானம் செய்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் கலந்து கொணடனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்தவா? தொழில் அதிபர் பயன் அடையவா? மோடிக்கு சிவசேனா கேள்வி
ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்த போடப்பட்டதா? அல்லது தொழில் அதிபர் பலன் அடையவா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.