தேசிய செய்திகள்

தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: கட்சியினரிடம் 16 மணி நேரம் கருத்துக்களை கேட்ட பிரியங்கா காந்தி + "||" + "Getting Views On How To Win": Priyanka Gandhi's Meet Ended At 5.30 am

தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: கட்சியினரிடம் 16 மணி நேரம் கருத்துக்களை கேட்ட பிரியங்கா காந்தி

தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்: கட்சியினரிடம் 16 மணி நேரம் கருத்துக்களை கேட்ட பிரியங்கா காந்தி
தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரிடம் விடிய விடிய கருத்துக்களை பிரியங்கா காந்தி கேட்டார்.
புதுடெல்லி,

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம்,  மிகப்பெரிய பேரணியுடன் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தனது தேர்தல் பணிகளை தொடங்கினார்.

தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி பல முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளை உத்தர பிரதேசத்தில் சந்தித்து ஆலோசித்து வருகிறார். நாளை வரை இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 16 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது. நேற்று மதியம் 1.30 மணிக்கு  தொடங்கிய கூட்டம்,  இன்று காலை 5.30 மணி வரை நடந்தது. விடிய விடிய நிர்வாகிகளை சந்தித்து பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மொத்தமாக 8 தொகுதிகளில் இருந்து நிர்வாகிகளை சந்தித்து பிரியங்கா காந்தி பேசினார்.  ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 10 நிர்வாகிகளை சந்தித்து இவர் பேசினார். இவற்றில் ரேபரலி, அமேதி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளும் அடங்கும். 

இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா காந்தி, "காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்து இந்த சந்திப்பு மூலம் அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் கருத்துக்களை நான் கேட்டறிந்தேன்" என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு ராகுல்காந்தி நடந்து செல்கிறார்.
2. டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை நிறைவு
டெல்லியில் ராகுல் காந்தியுடனான தமிழக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆலோசனை நிறைவடைந்தது.
3. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத்
பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆசாத் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
4. இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் படுகொலை: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல் காந்தி
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தொழில் அதிபர்களுக்கு மோடி சலுகை காட்டினார்: ராகுல் காந்தி
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, தொழில் அதிபர்களுக்கு மோடி சலுகை காட்டியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...