மாநில செய்திகள்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி + "||" + Drinking water in Chennai Rs 158 crore allocation Minister Velumani

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.
சென்னை,

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு இல்லை. 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்ன நிலையில் உள்ளது. குடிநீர் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.


இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் வேலுமணி கூறும் போது,

"திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் குடிநீருக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது, மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தயார்" என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்
கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
5. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை, இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.