மாநில செய்திகள்

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல் + "||" + If the plastic does not use the barrier Fine up to Rs 1 lakh Legal bill

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்

தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் - சட்ட மசோதா தாக்கல்
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை

தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம் பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

பிளாஸ்டிக் தடையை மீறினால்  ரூ.1 லட்சம் வரை அபராதம்  விதிக்கப்படும்  என சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் வேலுமணி
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.
4. கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் சட்டசபையில் காரசார விவாதம்
கிளீன் போல்டு, நோ-பால், சிக்சர் என கிரிக்கெட் வர்ணனைபோல் இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
5. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை; மத்திய அரசிடம் அசைந்து கொடுத்ததில்லை-ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை, இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் அசைந்து கொடுத்ததில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.