மாநில செய்திகள்

யாரிடம் யார் சிக்கிக்கொண்டது?- சட்டசபையில் காரசார விவாதம் + "||" + Who was trapped? Discussion on the legislature

யாரிடம் யார் சிக்கிக்கொண்டது?- சட்டசபையில் காரசார விவாதம்

யாரிடம் யார் சிக்கிக்கொண்டது?- சட்டசபையில் காரசார விவாதம்
யாரிடம் யார் சிக்கிக்கொண்டது? என சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்தில் இன்று பேசிய காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராமசாமி, “மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளை மிரட்டி வைத்துள்ளது. அதனால் நிதி பெற முடியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.


மேலும், தமிழகத்தில் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். 21 சட்டமன்ற தொகுதிகள் உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கிறது. உடனடியாக தேர்தலை நடத்த அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமசாமி பேசினார்.

இதற்கு பதில் அளித்த  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வழக்கு உள்ளது. அந்த பிரச்சினையால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், திருவாரூர் தேர்தலை சந்திக்க ஏன் திமுக அஞ்சுகிறது. தேர்தலை ஆணையம் அறிவித்தால், தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்” என்றார்.

மேலும், “மத்திய நிதி அமைச்சராக தமிழகத்தை சேர்ந்தவரே (ப.சிதம்பரம்) இருக்கும் போது தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற முடியவில்லை.

நாங்கள் யாரிடமும் சிக்கிக் கொள்ளவில்லை. தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராமசாமி, “நீங்கள் குறிப்பிட்ட நிதி அமைச்சர் மீண்டும் 4 மாதங்களில் நிதி அமைச்சர் ஆவார்” என்று கூறினார்.

அமைச்சர் தங்கமணி, “யாரை யார் மிரட்டுவது. நீங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது திமுகவை மிரட்டி கூட்டணி பேரம் பேசினீர்கள். திமுகவிற்கு சொந்தமான தொலைக்காட்சி அலுவலகத்தில் மேலே சிபிஐ ரெய்டும், கீழே கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி மிரட்டினீர்கள்” என்றார்.

“குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீடுகளிலும், தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடந்தது நினைவில்லையா. அது மிரட்டல் இல்லையா” என்று ஸ்டாலின் கூறினார்.

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது,  "மத்திய அரசிடம் சிக்கிக் கொண்டீர்கள் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் 1967ல் அண்ணா கொடுத்த அடியில் சிக்கிக் கொண்டு  மீள முடியாதது காங்கிரஸ் தான்” என்று கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கு காரணமாக தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள், ஜெயலலிதா இல்லாமல் நீங்கள் தேர்தலை சந்தித்து பாருங்கள், நிலை புரியும் அதிமுக தனித்து போட்டியிட தயாரா? என ராமசாமி  கேள்வி எழுப்பினார்.

“அதிமுக தனித்துப் போட்டியிட்ட வரலாறு உண்டு. ஆனால், காங்கிரஸ் யார் முதுகில் ஆவது சவாரி செய்கிறீர்கள்” என்று ஜெயக்குமார் பதில் அளித்தார்.

ஓ.பன்னீர் செல்வம் கூறும் போது, "அனைவரும் தனியாக நின்றால் அ.தி.மு.க.வும் தனித்து போட்டியிடும்" என கூறினார்.