தேசிய செய்திகள்

மோடியை தாக்கி கவிதை எழுதிய மம்தா பானர்ஜி + "||" + West Bengal CM Mamata Banerjee writes poem 'Key' to democracy

மோடியை தாக்கி கவிதை எழுதிய மம்தா பானர்ஜி

மோடியை தாக்கி கவிதை எழுதிய  மம்தா பானர்ஜி
ஜனநாயகத்தை காக்கும் விதமாகவும், மோடியை தாக்கியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கவிதை, இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பன்முக திறமை கொண்டவர்.  பாட்டு பாடுவார், ஓவியம் வரைவார், இசைக்கருவிகளை மீட்டுவார். 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடியை தாக்கி, அவர் 'சாவி' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை  எழுதியுள்ளார். 18 வரிகள்  கொண்ட இக்கவிதை இன்றைய பார்வையில் ஜனநாயகத்தை காப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்துகிறது.


கவிதையில், எவ்வாறு எல்லோரின் உதடுகளும் பூட்டப்பட்டிருக்கின்றன, இந்த அமைப்பு (பாஜக)  எப்படி ஜனநாயகத்தை இக்கட்டான சூழலில் தள்ளுகிறது என்று மம்தா விவரிக்கிறார்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தர்ணாவுக்கு சிறிது நேரம் முன்பாக மம்தா இதை எழுதியுள்ளார். அவரின் கைப்பட எழுதப்பட்ட கவிதை, முதல் முறையாக அப்படியே டுவிட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், மற்ற எதிர்க்கட்சியினரும் இந்த கவிதையை வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி
கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது என மோடி அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு
ஒரே தேசம்-ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவது இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
3. தமிழகம் இந்தி படிக்க வேண்டுமென பா.ஜனதா சொல்ல முடியாது மோடி அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்
இந்தி மொழி விவகாரத்தில் மோடி அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
4. மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
5. 2021 தேர்தல்; பிரசாந்த் கிஷோரை பணியில் அமர்த்தினார் மம்தா பானர்ஜி
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார்.