தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை: எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி உள்ளது -அருண்ஜெட்லி + "||" + Satyameva Jayate– the truth shall prevail. The CAG Report on Rafale reaffirms the dictum -Arun Jaitley

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை: எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி உள்ளது -அருண்ஜெட்லி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை: எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி உள்ளது -அருண்ஜெட்லி
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

இந்திய விமானப்படைக்குத் தேவையான போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசால்ட் நிறுவனத்துடன் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடைபெற்றது என்று காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்தது.


இந்தநிலையில், நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய கணக்குத் தணிக்கை குழு தாக்கல் செய்தது. 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் போர் விமானங்கள் விலை குறிப்பிடப்படவில்லை.

அந்த அறிக்கையில், ‘காங்கிரஸ் அரசில் போடப்பட்ட 126 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை, 2015-ம் ஆண்டு பா.ஜ.க அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப மதிப்பீடு நிலையின்போது ரத்து செய்தது. ரபேல் விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அம்சங்கள் 17 சதவீத  விலை குறைவானவை.

இருப்பினும், அந்த அம்சங்கள் தேவையற்றவை. பறக்கும் விமானத்தின் விலை 2007-ல் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு சமமானதுதான். ஒட்டுமொத்த ரபேல் ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட 2.86 சதவீதம் மலிவானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்க போகிறது என கேட்டுள்ளார்.

ரபேல் விமானங்களை வாங்க 2007 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் குறைந்த விலை, வேகமாக விநியோகம், சிறந்த பராமரிப்பு போன்ற அம்சங்கள் இருக்கின்றன என்றும் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாக, ரபேல் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
2. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணம் -காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
3. ரபேல் ஒப்பந்தம்: இடைத்தரகர் போல் பிரதமர் செயல்பட்டு உள்ளார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். #RafaleDeal #RahulGandhi
4. “இறந்த குதிரையை ஓடச்செய்வது” ரபேல் விவகாரத்தில் ராகுலின் புதிய குற்றச்சாட்டை நிராகரித்தார் நிர்மலா சீத்தாராமன்
ரபேல் விவகாரத்தில் ராகுலின் புதிய குற்றச்சாட்டை நிராகரித்த நிர்மலா சீத்தாராமன், “இறந்த குதிரையை ஓடச்செய்வது” போன்றது என விமர்சனம் செய்துள்ளார்.
5. ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க தயாரா? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்
ரபேல் ஒப்பந்தம், தேச பாதுகாப்பு குறித்து என்னுடன் 5 நிமிடம் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.