தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் உள்ள பள்ளியில் வெடி விபத்து: 10 மாணவர்கள் காயம் + "||" + Jammu and Kashmir Visuals from the hospital where students who have been injured in an explosion in a Pulwama school

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் உள்ள பள்ளியில் வெடி விபத்து: 10 மாணவர்கள் காயம்

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் உள்ள பள்ளியில் வெடி விபத்து: 10 மாணவர்கள் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் உள்ள பள்ளியில் மர்ம பொருள் வெடித்ததில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம பொருள் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் காயம் அடைந்த செய்தி கேட்ட பெற்றோர் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். பள்ளியில் மர்ம பொருள் வெடித்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...