மாநில செய்திகள்

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் - தமிழிசை சவுந்தரராஜன் + "||" + The BJP is ready to stand alone in Tamil Nadu Tamilisai Soundararajan

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் - தமிழிசை சவுந்தரராஜன்

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் - தமிழிசை சவுந்தரராஜன்
அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி தொடர்பான திரைமறைவு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாளை ஈரோட்டிற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார். வேலூருக்கு ரவிசங்கர் பிரசாத், தி.மலைக்கு ஸ்மிருதி இரானி வருகை தர உள்ளனர். 

எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் நாங்களும் தனித்து போட்டியிடுவதை பற்றி பரிசீலிப்போம். அனைத்து கட்சிகளும் கூட்டணி வைத்துதான் போட்டியிடுகின்றன. 

கூட்டணி அமைவது தேவையானது. காலத்தின் கட்டாயம். வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.