மாநில செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு + "||" + Permission to keep banners for Jayalalithaa's birthday rejected

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனுவை நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர்.
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பேனர்கள் வைப்பதற்கு எதிரான மனு மீது கடந்த டிசம்பரில் நடந்த விசாரணையில், அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக வைக்கும் பேனர்களை அகற்ற முடியவில்லை என்றால், அரசு அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சிகளில் சேர்ந்துவிடுங்கள் என நீதிபதிகள் கடுமையாக கூறினர்.

தொடர்ந்து, பேனர்கள் வைப்பதற்கான விதிகளையும், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளையும் தீவிரமாக அமல்படுத்துவோம். விதிமீறல் எதுவும் இருக்காது என்று தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்பும் உறுதியான உத்தரவாதம் தரும் வரை, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் எந்த ஒரு பேனர்களையும் வைக்கக்கூடாது.

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சாலைகள், சாலையோரங்களில் இருபுறமும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு இடையூறாக பேனர்கள் வைக்க மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து பேனர்கள் வைக்க அ.தி.மு.க. முடிவு செய்தது.

இதனால் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள் வைப்பதற்கான முன் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. பாலகங்கா மனு செய்துள்ளார்.

ஆனால் இதனை விசாரணை செய்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுத்து விட்டனர்.  மனுவையும் நிராகரித்தனர்.  தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
2. குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
குடிநீர் கேட்டு கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.
3. சிவகாசியில் 3–வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் ஆர்.டி.ஓ. நேரில் வந்து கோரிக்கை மனு பெற்றுக்கொண்டார்
சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் 3–வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். முடிவில் ஆர்.டி.ஓ. நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.
4. பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா பேனர் வைக்க அனுமதி கேட்கும் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி கேட்கும் மனுக்களுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை
மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் என திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...