தேசிய செய்திகள்

பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது - பிரதமர் மோடி + "||" + BJP Government For the people and for the country Has worked over 100 percent PM Modi

பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது - பிரதமர் மோடி

பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது - பிரதமர் மோடி
பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது என பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,

பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் இன்று  என்பதால், இன்று பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் செயற்கைக்கோள்கள் அதிகளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.  வங்கதேசம் - இந்தியா இடையேயான நில பிரச்சினையை தீர்த்துள்ளோம்.


பெண் எம்.பி-க்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம் பெற்றுள்ள அமைச்சரவை இது; இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடை பெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.

ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன; கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம்.

வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்க தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது.

ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தோம். பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது. “30 ஆண்டுகளுக்குப் பின் எனது தலைமையில் தான் ஸ்திரமான ஆட்சி அமைந்தது" என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் : முலாயம் சிங் யாதவ் பேச்சால் மக்களவையில் பரபரப்பு
மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்களவையில் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
2. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை -தம்பிதுரை ஆவேசம்
மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றஞ்சாட்டினார்.
3. நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. காவிரி விவகாரம்; மாநிலங்களவையில் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
5. சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...