மாநில செய்திகள்

ஜாக்டோ ஜியோ போராட்டம்; 1,111 பேரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது பள்ளி கல்வி துறை + "||" + Suspend order of 1,111 cancelled by Department of School Education

ஜாக்டோ ஜியோ போராட்டம்; 1,111 பேரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது பள்ளி கல்வி துறை

ஜாக்டோ ஜியோ போராட்டம்; 1,111 பேரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது பள்ளி கல்வி துறை
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 ஆசிரியர்களின் பணியிடை நீக்க உத்தரவை பள்ளி கல்வி துறை ரத்து செய்துள்ளது.
சென்னை,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி 22ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.

அவர்களை உடனடியாக பணிக்கு திரும்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை எனில் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன்பின் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், 1,111 ஆசிரியர்களின் பணியிடை நீக்க உத்தரவை பள்ளி கல்வி துறை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது: வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
மாமூல் கொடுக்காவிட்டால் சாராயம் விற்க கூடாது என்று வாட்ஸ்-அப்பில் பரவும் ஆடியோவால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2. திருவாரூரில் பணியில் இல்லாத மருந்தாளுநர் பணியிடை நீக்கம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவு
திருவாரூரில்,் பணி நேரத்தில் பணியில் இல்லாத மருந்தாளுநரை பணியிடை நீக்கம் செய்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
3. வாகன சோதனையில் நிற்காமல் சென்ற மினி லாரி டிரைவரை தாக்கிய முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவு
வேலூரில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற மினி லாரி டிரைவரை தாக்கிய முதல்நிலை காவலர் தங்கராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.
4. தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
5. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பணியிடை நீக்கம்
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.