மாநில செய்திகள்

சின்னதம்பி யானையை பிடிக்கும்போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது -வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை + "||" + ChinnaThambi elephant Allow Forest Department to catch

சின்னதம்பி யானையை பிடிக்கும்போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது -வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

சின்னதம்பி யானையை பிடிக்கும்போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது -வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை
சின்னதம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை,

முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோர் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்னதம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. யானைக்கு காயம் ஏற்படாமல் பிடிக்க வேண்டும். 
மக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். சின்னதம்பியை வனத்துக்கு அனுப்புவதா, முகாமில் பராமரிப்பதா என பின்னர் முடிவு செய்யப்படும்.
 
உத்தரவு நகலுக்காக காத்திருக்க வேண்டாம். உடனே சின்னதம்பி யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லலாம். விவசாயிகள் பாதிப்பை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.