தேசிய செய்திகள்

விதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் + "||" + RBI imposes penalty on 7 banks

விதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்

விதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்
விதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
புதுடெல்லி,

வங்கிக்கடன் தவணையைத் தாமதமாகக் கட்டினால் வங்கிகள் நமக்கு அபராதம் விதிப்பது வாடிக்கை. அதேபோல, தற்போது வங்கிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன், அதே காரணத்திற்காக சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டியது வங்கிகளின் கடமை. ஆனால், அந்தக் கடமையைச் சரிவர செய்யாததாகப் புகார் எழுந்ததையொட்டி, கடந்த வாரத்தில்தான் எஸ்பிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. 

இந்நிலையில், தற்போது அதே காரணத்திற்காக, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு  தலா ஒன்றரை கோடி ரூபாயும், ஆந்திரா வங்கிக்கு ஒரு கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.

நிதி பயன்பாட்டை கண்காணித்தல், மற்ற வங்கிகளுடன் தகவல்களை பரிமாறுதல் மற்றும் மோசடி குறித்து தகவல் பரிமாற்றம் செய்தல் ஆகியவை தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றாததால் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

இதேபோல,  எச்.டி.எப்.சி, ஐ.டி.பி.ஐ, கோடக் மகிந்திரா ஆகிய மூன்று வங்கிகளுக்கும் தலா 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.