மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (14-ம் தேதி) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் -மெட்ரோ நிர்வாகம் + "||" + The Chennai Metro train will be on Monday

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (14-ம் தேதி) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் -மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (14-ம் தேதி) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் -மெட்ரோ நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரயிலில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை கடந்த 10-ந்தேதி திருப்பூரில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, 10-ந்தேதி 67 ஆயிரம் பேரும், 11-ந்தேதி 2 லட்சத்து ஆயிரத்து 550 பேரும் இலவசமாக பயணம் செய்துள்ளனர். நேற்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் இலவச பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்றும் (புதன்கிழமை) மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (14-ம்தேதி) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலுக்கான புதிய கட்டண பட்டியலை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.60 ஆகவும், குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.10 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.