மாநில செய்திகள்

புதுச்சேரி: காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு + "||" + Puducherry: The full-scale struggle to be held on behalf of Congress on the day of adjournment

புதுச்சேரி: காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி: காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக, முதல்வர் நாராயணசாமி இன்று பிற்பகல் முதல், கவர்னர் மாளிகை முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.


முன்னதாக பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதில் கவர்னர் கிரண்பேடி சாலையில் நின்று, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

துணைநிலை கவர்னரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, கவர்னர் மாளிகை முன் அமைச்சர்களுடன் சென்று தர்ணா போராட்டம் நடத்தினார். அங்கேயே அலுவலக கோப்புகளிலும் கையெழுத்து போட்டனர். பின்னர் புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது .

இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை முன்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை (வியாழன்) நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

மேலும் 2 நாட்களுக்குள் துணைநிலை ஆளுநர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், கூட்டணி கட்சிகளுடன் பேசி முழுஅடைப்பு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமியுடன், போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தலைமை செயலர் அஸ்வனி குமார், டி.ஜி.பி சுந்தரி நந்தா பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்வர் நாரயணசாமி தர்ணா : டெல்லி புறப்பட்டார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிரண்பேடி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
2. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குந்தகம்: கிரண்பெடியுடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு
புதுவையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி ஆகியோருடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி செய்வதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி ரங்கசாமி அறிவிப்பு
புதுவை நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி கூறினார்.
4. புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது
புதுச்சேரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்திய 268 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.
5. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் - நாராயணசாமி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடந்த போராட்டத்தில் நாராயணசாமி, கனிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.