தேசிய செய்திகள்

காஷ்மீரில் பள்ளியில் வெடி விபத்து; 16 மாணவர்கள் காயம் + "||" + In Kashmir At school Explosion; 16 students injured

காஷ்மீரில் பள்ளியில் வெடி விபத்து; 16 மாணவர்கள் காயம்

காஷ்மீரில் பள்ளியில் வெடி விபத்து; 16 மாணவர்கள் காயம்
காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த வெடி விபத்தில், 16 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நர்பால் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று குளிர்கால பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென பள்ளியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் 16 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. “வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும்” - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ராகுல்காந்தி கண்டனம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கும், அரசுக்கும் நாடே ஓரணியில் ஆதரவாக நிற்கும் என்றும் அவர் கூறினார்.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
4. காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 7 போலீசார் பலி
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 7 போலீசார் பலியாயினர்.
5. காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம்
காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என்று இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.