மாநில செய்திகள்

சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் + "||" + Vijyakanth to rerun chennai on 16 feb

சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்
மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார்.
சென்னை,

கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் மேல் சிகிச்சை முடிந்த நிலையில், பூரண உடல் நலத்துடன் வரும் 16 ஆம் தேதி, விஜயகாந்த் தாயகம் திரும்புவார் என்று தேமுதிக கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் சென்னை திரும்பியதும், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே, அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேசப்படும் நிலையில், விஜயகாந்த் சென்னை திரும்பியதும் கூட்டணி பேச்சுவார்த்தை  முக்கிய கட்டத்தை எட்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை
சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2. மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
மாநில பால் பேட்மிண்டன் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
3. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னைக்கு அகல நடைபாதை
இத்திட்டம் பற்றி சந்தேகங்கள் வலுத்திருக்கும் நிலையில், சென்னையில் இதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன; சில நகரங்கள் இதில் முன்னிலையிலும், வேறு சில நகரங்கள் பின் தங்கியும் உள்ளன.
4. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி : மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி - நடிகர் ரஜினிகாந்த்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு, வாகன ஓட்டிகள் கலக்கம்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.