தேசிய செய்திகள்

சூடு பிடித்த ஒப்பந்த விவகாரம்: 3 ரபேல் போர் விமானங்கள் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பெங்களூரு வந்துள்ளன + "||" + Watch video: Amid controversy over defence deal, three Rafale jets land in Bengaluru for Aero India show

சூடு பிடித்த ஒப்பந்த விவகாரம்: 3 ரபேல் போர் விமானங்கள் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பெங்களூரு வந்துள்ளன

சூடு பிடித்த  ஒப்பந்த விவகாரம்: 3 ரபேல் போர்  விமானங்கள் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பெங்களூரு வந்துள்ளன
ஒப்பந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா 2019 விமான கண்காட்சியில் கலந்து கொள்ள பெங்களூரு வந்து இறங்கி உள்ளன.
பெங்களூரு,

பாராளுமன்ற தேர்தல்  விரைவில் வர உள்ள சூழ்நிலையில் ரபேல் விவகாரம்  மத்திய அரசுக்கு கடும் தலைவலியை  ஏற்படுத்தி உள்ளது.  மாநிலங்களவையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு வாரியம் (சிஏஜி) அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.  

அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் இது குறித்து ராகுல் காந்தி கூறும் போது அனில் அம்பானிக்காக மட்டுமே ரபேல் ஒப்பந்தத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டுள்ளன. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு கூறிய அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது என கூறினார்.

இந்த நிலையில்  பிரான்ஸ் தயாரிப்பான  ரபேல் போர் விமானங்கள்  மூன்று  பெங்களூருவில் தரையிறங்கி உள்ளது.  வருகிற பிப்ரவரி 20ந்தேதி  இந்திய விமான கண்காட்சி  2019 (Aero India show 2019)  தொடங்குகிறது.  

போர் விமானங்கள் யெலகங்கா விமானப்படை நிலையத்திற்கு வந்தடைந்தன என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இரு விமானங்கள் பறக்கும் பயிற்சிக்காகவும்,   மூன்றாவது விமானம் காட்சிக்கு வைக்கவும்  பயன்படுத்தப்படும்  என்று அறிக்கைகள் தெரிவித்து உள்ளன.

இந்திய விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை  துணை தலைமை மார்ஷல் விவேக் சவுதாரி உள்பட ஏராளமான  இந்திய விமானப்படை அதிகாரிகள் விமானத்தில் பயணிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்த விவகாரம்: நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் தாக்கு
ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
2. ரபேல் ஒப்பந்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுத்தாக்கல்
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.