மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் + "||" + 275 new buses across Tamil Nadu Chief Minister Edappadi Palinasamy started

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் புதிதாக 275 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,

தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவையை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சென்னையில் இருந்து 17 பேருந்துகள், விழுப்புரத்தில் இருந்து 72 பேருந்துகள், சேலத்தில் இருந்து 43 பேருந்துகள், கோவையில் இருந்து 75 பேருந்துகள், கும்பகோணத்தில் இருந்து 68 பேருந்துகள் என  இயக்கப்படுகின்றன. 

இவற்றில் மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகளுடன் அகலமான தாழ்தள படிக்கட்டுகள், தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பேருந்துகளிலும் நின்று பயணிக்க அகலமான பாதை, பேருந்தின் இருபுறமும் அவசரகால வழிகள், இறங்கும் இடத்தை அறிவிக்க ஒலிபெருக்கி வசதி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் ஊன்றுகோலை வைக்க இடம், அவர்கள் இறங்கும் இடத்தை தெரிவிக்க பெல் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு; மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை
நீர்வளத்துறை அமைச்சரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அப்போது மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.
2. எட்டயபுரம் அரசு பெண்கள் பள்ளியில், ரூ.2.64 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் - ஆய்வகம்
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.64 கோடி செலவில் கட்டப்பட்ட 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
3. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
4. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது -முதல்வர் பழனிசாமி
விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
5. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
‘ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்லைப்புற வழியாக சந்திரசேகரராவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா?’ என்று சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.