தேசிய செய்திகள்

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் - கிரண்பெடி குற்றச்சாட்டு + "||" + Chief Minister Narayanasamy is involved in Dharna KiranBedi

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் - கிரண்பெடி குற்றச்சாட்டு

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் - கிரண்பெடி குற்றச்சாட்டு
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பெடி கூறியுள்ளார்.
சென்னை,

புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். 

மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு  தொண்டர்களுடன் விடிய விடிய நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், புதுச்சேரியில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பெடி, 

மத்திய அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறானது. நியாயவிலைக்கடை பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு தேதி குறித்து கடிதம் அனுப்பி விட்டோம். ஹெல்மெட் கட்டாயம் என்று கூறுவது தவறா?  பிப்.,21 அன்று காலை அவரை சந்திக்க நேரம் அளித்துள்ளேன். இன்று முதல் நான் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். பிப்.,20 அன்று நள்ளிரவு தான் திரும்புவேன் என கூறிவிட்டேன். ஆனால் முன்னறிவிப்பின்றி தர்ணா செய்து வருகிறார்.  எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.