மாநில செய்திகள்

கலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் + "||" + Artist's name Awards again Minister M. Pandiarajan

கலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

கலைஞர் பெயரில் மீண்டும் விருதுகள் - அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்
மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கூறினார்.
சென்னை,

சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.  செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான முதல்வர், நிறுவனம் முழு வீச்சில் செயல்பட மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் "மத்திய அரசு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டி உள்ளது. நிதி ஒதுக்கியதும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனம் 3 மாதத்தில் அமைக்கப்படும். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படுவார். மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கலைஞர் விருதை மீண்டும் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பெரும்பாக்கத்தில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன வளாகம் 3 மாதங்களில் செயல்பட தொடங்கும்" என அவர் கூறினார்.