தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உறுதியானது: விரைவில் தொகுதிகள் அறிவிப்பு + "||" + Friends Again BJP And Shiv Sena To Announce Tie Up For National Polls

மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உறுதியானது: விரைவில் தொகுதிகள் அறிவிப்பு

மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உறுதியானது: விரைவில் தொகுதிகள் அறிவிப்பு
மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உறுதியானது, விரைவில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள சிவசேனா, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. 2019 தேர்தலில் இரு கட்சிகளும் தனியாக போட்டியிடுவோம் என அவ்வப்போது பேசியது. ஆனால் பெரும்விளைவு நேரிடும் என இரு கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்து இருந்தனர். இதனால் கூட்டணி அவசியம் என்ற நிலைக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டது. இந்நிலையில் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த வாரம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டணி தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியது.
 
இந்நிலையில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இருகட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்கிற தொகுதி விவரங்களை அறிவிக்க உள்ளது.  சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “இன்று மாலை உத்தவ் தாக்கரேவை, அமித் ஷா சந்தித்துப் பேசுகிறார். அப்போது தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பார்கள் " என கூறினார். 

மராட்டியத்தில் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட இருகட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தை அடுத்து மராட்டியம் அதிகமான மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளது.