உலக செய்திகள்

மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ் + "||" + France will be moving a proposal at UN to ban Masood Azhar

மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்

மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளது. அந்தக் கவுன்சிலில், வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயன்று வருகிறது. ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலை தென்படவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை சீனா தடுத்து வருகிறது. 

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை மற்ற நாடுகள் ஆதரிக்க சீனா மட்டும் தடையை ஏற்படுத்தியது. வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு நாடு தடையை ஏற்படுத்தினாலும் தீர்மானம் நிறைவேறாது. புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் இரண்டாவது முறையாக இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
2. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
3. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்?
பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 3 பேர் உடல் கருகி சாவு
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.