கிரிக்கெட்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத் + "||" + Banning cricket with Pakistan a justified demand Union minister Ravi Shankar Prasad

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை பல்வேறு மட்டத்தில் எழுந்து வருகிறது. இந்தியா  மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கனவே இருதரப்பு போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரிய போட்டிகளில் விளையாடி வருகிறது. கடைசியாக ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடியது.  2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

 இந்நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 

ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “கிரிக்கெட் விவகாரத்தில் நான் கருத்து கூற முடியாது, ஆனால் விளையாடக்கூடாது என்பவர்களின் கோரிக்கையும் நியாயமானதுதான். சினிமா மற்றும் கலை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இப்போது வழக்கமான நிலை காணப்படவில்லை. எனவே,  இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. சர்வதேச போட்டியாக இருக்கும் நிலையில், இந்திய பாதுகாப்பு முகமையுடன் ஆலோசனையை மேற்கொண்டு, அதனுடைய கருத்தை மனதில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.” என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது
அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
2. வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை - அமெரிக்கா
இறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
3. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார்
இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.
5. ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் வேஷம் -இந்தியா
ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.