தேசிய செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் + "||" + Woman intruder from Pakistan shot, injured by BSF in Punjab

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் இந்திய ராணுவம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான நகர்வுகளை துல்லியமாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் செக்டாரில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒருவர், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, விசாரணையும் நடைபெற்று வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பெண்ணை பலமுறை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் காதில் வாங்காமல் உள்ளே வந்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு விதிமுறைகளின்படி வீரர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
2. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3. தடை விதிக்கப்பட்டும் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவி மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது
இந்தியாவில் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவிக்கு தடையிருந்தாலும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது என்பது தெரியவந்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் வீரமரணம்
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
5. இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் - பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் என்று பூடான் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார்.