கிரிக்கெட்

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன் + "||" + World Cup not more important than the country, say Harbhajan and Azharuddin

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்
தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் கூறி உள்ளனர்.
புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட கூடாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர்.  

2019 உலகக் கோப்பை போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் விளையாடுவது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்.  இந்தியாதான் முதலில், பின்னர்தான் விளையாட்டு என கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் பேசுகையில், “ஒரு கிரிக்கெட் வீரராக தேசத்தைவிட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முக்கியமானதாக பார்க்கவில்லை. முதலில் நாம் இந்தியர்கள், பின்னர்தான் நாம் கிரிக்கெட் வீரர்கள். தேசத்தால்தான் நாம் இப்போது இந்நிலையில் உள்ளோம். இந்தியாவிற்காக நாம் விளையாடுவதால் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்” என கூறினார். 

பாகிஸ்தான் உடனான இருதரப்பு போட்டியை புறக்கணித்த இந்தியா, உலக கோப்பையிலும் விளையாடக்கூடாது.  “இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை என்றால், மற்ற பகுதிகளிலும் விளையாடமலே இருக்கலாம். ஹர்பஜன் சிங் பேச்சை நான் ஆதரிக்கிறேன். தேசத்தைவிடவும் உலக கோப்பை முக்கியமானதாக இருக்க முடியாது” என அசாருதீன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் உடல் தகுதி பெற்றார்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ், உடல் தகுதி பெற்றார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்: சச்சின் தெண்டுல்கர் 16 வருட சாதனையை முறியடிப்பார்களா?
உலக கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை இந்த தொடரில் யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.
3. உலக கோப்பை போட்டி: பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப்போகும் 4 சுழல்பந்து வீச்சாளர்கள்
உலக கோப்பை போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு 4 சுழல்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
4. உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா விளையாடும்; சவுரவ் கங்குலி
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியா விளையாடும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
5. உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.