தேசிய செய்திகள்

பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில் + "||" + No body wants to see armed conflict between two nuclear powers Saudi

பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில்

பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில்
பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் என மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதிலளித்துள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்தார். பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உறுதி அளித்தார். 

இந்நிலையில் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அதில் அல் ஜுபியர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பதட்டத்தை தணிக்கும், பிரச்சனையை அமைதியாக தீர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தஒரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் யாராகினும் ஐ.நா. சபையால் தடை செய்யப்படவேண்டும் (மசூத் அசார் விவகாரம்). ஐ.நா. தீர்மானம் தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையிலான கூட்டறிக்கை, ஜெய்ஷ் இ முகமது தலைவர் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு எதிரானது கிடையாது. 

இப்போதுள்ள பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நாங்களாகவே தலையிடமாட்டோம்.  புல்வாமாவில் கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பது முக்கியமானது. அணுஆயுத பலம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை யாரும் விரும்பவில்லை, இதனால் பயங்கரவாதிகளை தவிர யாரும் பயனடையப்போவது கிடையாது” என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
2. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
3. ‘மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மற்றொரு தாக்குதல் நடத்தினால் : இந்தியா சும்மா இருக்காது என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.