உலக செய்திகள்

நான் அதிபராகாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போர் வந்திருக்கும்: டிரம்ப் சொல்கிறார் + "||" + Withdrawal of U.S. troops from South Korea not under consideration, says Trump ahead of meeting with Kim

நான் அதிபராகாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போர் வந்திருக்கும்: டிரம்ப் சொல்கிறார்

நான் அதிபராகாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போர் வந்திருக்கும்: டிரம்ப் சொல்கிறார்
தென்கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
நியூயார்க், 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் இடையேயான 2-வது சந்திப்பு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. 

இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போரில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றார். மேலும், டிரம்ப் கூறும் போது, “ தற்போது வடகொரியாவுடன் சிறப்பான உறவு என்ற நிலையை எட்டியுள்ளோம். வடகொரியாவில் தற்போது, அணு ஆயுத சோதனை இல்லை. ஏவுகணை சோதனை நடைபெறவில்லை” என்றார். 

தென்கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அதுபோன்ற திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். கிம் ஜாங் அன்னுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
2. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
தெலுங்கானாவில் விவசாயி ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சிலை வைத்து வழிபடுகிறார்.
3. அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் துவங்கினார்.
4. அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்
அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று வடகொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
5. சர்வதேச தடைகளை மீறியதாக வடகொரியாவின் சரக்கு கப்பலை கைப்பற்றியது, அமெரிக்கா
சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.