தேசிய செய்திகள்

அசாமில் வி‌ஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்வு + "||" + Assam Hooch Tragedy Death Toll Rises to 149 in Golaghat Jorhat

அசாமில் வி‌ஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்வு

அசாமில் வி‌ஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்வு
அசாமில் வி‌ஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.
கவுகாத்தி,  

அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா தேயிலை தோட்டத்தில் ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு பெண் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வி‌ஷச்சாராயம் வாங்கி அருந்தினர். இதில் பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 300–க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் பலர்  உயிரிழந்தனர். இதனால் வி‌ஷச்சாராய சாவு எண்ணிக்கை உயர்ந்து வந்தது. 149 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே உள்ளூரில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கும், போலீசுக்கும் இடையே மறைமுகமான தொடர்பு உள்ளது என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்பட்ட இடங்களில் இருந்து பேரல், பேரலாக சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி
அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி பலியாகினர்.
2. காடெல்லாம் வெள்ளம்... வீட்டிற்குள் புகுந்து ஓய்வெடுத்த புலி...
அசாமில் வெள்ளம் காரணமாக காட்டுப்பகுதியும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
3. வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது
அசாமில் வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிருஷ்ணா என பெயரிடப்பட்டுள்ளது.
4. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அபாயக்கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.
5. அசாமில் கனமழையால் வெள்ளம்: 15 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாமில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. 15 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.