தேசிய செய்திகள்

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் நடவடிக்கை + "||" + France To Propose Banning Masood Azhar After Assuming UNSC Lead Report

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் நடவடிக்கை

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் நடவடிக்கை
மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அங்கீகரிக்க இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தை பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்து வருகிறது.  15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா வீட்டோ மறுப்பு உரிமையை கொண்டுள்ளது.  கவுன்சிலில், வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயன்று வருகிறது. ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலை தென்படவில்லை. 

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை சீனா தடுத்து வருகிறது. 

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை மற்ற நாடுகள் ஆதரிக்க சீனா மட்டும் தடையை ஏற்படுத்தியது. வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு நாடு தடையை ஏற்படுத்தினாலும் தீர்மானம் நிறைவேறாது. புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது. பிரான்ஸ் இரண்டாவது முறையாக இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திர கூட்டம்  மார்ச் மாதம் நடக்க உள்ளது, இதில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வருகிறது.