உலக செய்திகள்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : இம்ரான்கான் அறிவிப்பு + "||" + Ready to negotiate with India: Imran Khan's announcement

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : இம்ரான்கான் அறிவிப்பு

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : இம்ரான்கான் அறிவிப்பு
பதற்றத்தை தணிக்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத், 

இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அளித்தது. இதில் சுமார் 350 பயங்கரவாதிகள் பலி ஆனார்கள். நேற்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களில் ஒன்றை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. 2 போர் விமானங்கள் தப்பிச் சென்று விட்டன.

இதேபோல் தங்கள் எல்லைக்குள் 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தொலைக்காட்சியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவுக்கு பாகிஸ்தானின் நிலைப்பாட்டை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எங்கள் நாட்டுக்குள் வந்தால், நாங்களும் பதிலுக்கு அதையே செய்வோம். இந்தியாவின் மிக் ரக போர் விமானங்கள் இரண்டை நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம்.

எல்லா போர்களுமே தவறான கணிப்புகளில் முடிகிறது. அந்த போர்கள் எங்கே போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இரு தரப்பினருமே சூழ்நிலையை உணர்ந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

நான் இந்தியாவுக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களிடம் இருக்கும் ஆயுதங்கள் எங்களிடமும் உள்ளன. அப்படி இருக்கும் போது நாம் தவறான கணிப்புகளில் ஈடுபடலாமா? இப்போதுள்ள சூழ்நிலை மேலும் மோசம் அடைந்தால் (போர் ஏற்பட்டால்) அது எனது கட்டுப்பாட்டிலோ அல்லது நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது.

எனவே பதற்றத்தை தணிக்க இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அணு ஆயுதங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட குழுவை இம்ரான்கான் நேற்று கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். ஆனால் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட வி‌ஷயங்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெகமூத் குரேஷி கூறுகையில், தற்பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 200 பேரின் கணக்குகளை டுவிட்டர் முடக்கியுள்ளது.
2. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
4. பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலியாகினர்.
5. 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 சாலைகள் மற்றும் ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு காஷ்மீர் என பெயர் சூட்டுகிறது.