தேசிய செய்திகள்

பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை + "||" + Prime Minister Narendra Modi consulted with top security officials

பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி, 

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் பலியானார்கள்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை விமானங்கள் நேற்றுமுன்தினம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. அதில், 350–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானார்கள். இதற்கு இந்தியா முழுவதும் ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் விமானங்கள், நேற்று இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றன. அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் காரணமாக, பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிகழ்வுகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை உயர் அதிகாரிகள் மற்றும் இதர பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினர். அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
2. கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை
கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
3. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
நாகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
4. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பார்வையிட்டார்.
5. வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.