மாநில செய்திகள்

மதுரை வழியாக இயக்கப்படும்: சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார் + "||" + From Chennai New Railway to Kollam Railway Minister Piyush Goyal Starting today

மதுரை வழியாக இயக்கப்படும்: சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்

மதுரை வழியாக இயக்கப்படும்: சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயிலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை,

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்படுகிறது.

இந்த ரெயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்


இந்த ரெயில் (எண்.16101) தினந்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், எண்.16102 ரெயில், கொல்லத்தில் இருந்து தினமும் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

தர்மபுரி ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிற விழாவில் காணொலி காட்சி வழியாக, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரெயிலை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தினமும் இயக்கப்பட்டு வருகிற அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16191), நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இதேபோல மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு (எண்.16192), மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ள ரெயில் நேரம் தொடர்பான புதிய அட்டவணை இன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுகிற அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலையும், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பச்சைக்கொடி அசைத்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இதேபோன்று மொரப்பூர்-தர்மபுரி இடையேயான புதிய வழித்தடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கே.பி.அன்பழகன், அன்புமணி ராமதாஸ் எம்.பி., தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷ்ரஸ்தா மற்றும் தென்மேற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஏ.கே.சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அதே சமயத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட் (என்.டி.பி.எல்) அனல் மின்நிலைய வளாகத்தில் நடக்கிற விழாவில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கலந்துகொள்கிறார்.

அங்கு அவர் என்.டி.பி.எல். மூலம் தூத்துக்குடியில் அமைக் கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தையும், நெல்லையில் அமைக் கப்பட்டுள்ள 150 மெகாவாட் சூரிய ஒளி சக்தி நிலையத்தையும் (சோலார் பவர் பிளான்ட்) பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மாலை 5.30 மணி அளவில் நடக்கிற மகா சிவராத்திரி விழாவிலும் பியூஸ் கோயல் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில் அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்ததாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
2. சென்னையில் 6 இடங்களில் தபால் ஓட்டுப்பதிவு தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் வாக்களித்தனர்
சென்னையில் 6 இடங்களில் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நேற்று தபால் ஓட்டு போட்டனர்.
3. சென்னையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக பிரசாரம்
மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வீதி, வீதியாக சென்று தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் நடந்து சென்று வாக்கு சேகரித்ததால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
4. சென்னையில் 3 தொகுதிகளில் 94 பேர் போட்டி
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
5. டாஸ்மாக் பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டம் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நடத்த முடிவு
சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது என டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.