தேசிய செய்திகள்

காதலர்களுடன் வந்த 32 இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கும்பல் சிக்கியது + "||" + Cycle-borne hunters nabbed for serial rapes, murders

காதலர்களுடன் வந்த 32 இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கும்பல் சிக்கியது

காதலர்களுடன் வந்த 32 இளம்பெண்களை  மிரட்டி பாலியல் வன்கொடுமை: கும்பல் சிக்கியது
காதலர்களுடன் சுற்றுலா வரும்போது மிரட்டி 32 இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
எலூரு,

 ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஸ்தலமான புத்த  குகைக்கோவிலுக்கு காதல் ஜோடிகள் எப்பொழுதும் அதிகமாக வருவதுண்டு.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் தனிமையை விரும்பும் காதல் ஜோடிகள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். மற்றபடி வார நாட்களில் அங்கு பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இருக்காது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த குகைக்கு நவீன் குமார் – ஸ்ரீ தாரிணி என்ற இளம்காதல் ஜோடி ஒன்று சென்று அங்கு தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற மர்மகும்பல், நவீனை அடித்துப்போட்டுவிட்டு அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பொட்லூரி என்பவனை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

பொட்லூரி தனது நண்பர்கள் சோமய்யா, கங்கய்யா, நாகராஜு ஆகியோருடன் சேர்ந்து இதுவரை 32 பெண்களை கற்பழித்துள்ளார். அதில் 3 ஆண்களையும் ஒரு பெண்ணையும் கொடூரமாக கொலையும் செய்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...