தேசிய செய்திகள்

‘திருமணத்துக்கு முந்தைய உறவால் எச்.ஐ.வி. பரவும்’ கேரள பாடப்புத்தகத்தில் தகவல் + "||" + Kerala School Textbook Says HIV Spreads Through Pre martial Extramarital Sexual Conduct

‘திருமணத்துக்கு முந்தைய உறவால் எச்.ஐ.வி. பரவும்’ கேரள பாடப்புத்தகத்தில் தகவல்

‘திருமணத்துக்கு முந்தைய உறவால் எச்.ஐ.வி. பரவும்’ கேரள பாடப்புத்தகத்தில் தகவல்
‘திருமணத்துக்கு முந்தைய உறவு அல்லது தகாத உறவால்’ எச்.ஐ.வி. பரவும் என கேரள பாடப்புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் 10–ம் வகுப்பு மாணவர்களின் உயிரியியல் பாடப்புத்தகத்தில் ‘நோய் தடுப்பு முறைகள்’ என்ற ஒரு பாடம் இடம்பெற்று உள்ளது. 

இதில் எச்.ஐ.வி. வைரஸ் பரவும் முறைகள் குறித்த கேள்விக்கு சில விடைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு சரியான பதிலுக்கு மத்தியில் ‘திருமணத்துக்கு முந்தைய உறவு அல்லது தகாத உறவால்’ எச்.ஐ.வி. பரவும் என்ற தவறான விடையும் கூறப்பட்டு இருந்தது. கடந்த 2016–ம் ஆண்டு முதலே இந்த பாடம் 10–ம் வகுப்பில் இடம்பெற்று இருந்த போதும், இந்த தவறை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் அருண், புத்தகத்தில் இடம்பெற்று இருந்த தகவலை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து வெகுவாக இந்த புகைப்படம் விசர்சனங்களுடன் பகிரப்பட்டது. இதைப்பார்த்து கல்வியாளர்கள், டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் வெளியிட்டனர். அத்துடன் இந்த தவறு குறித்து மாநில கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கும் தகவல்  தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த தவறை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகத்தில், இந்த தவறை களையும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்
கேரளாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களின் கேள்வியால் கோபம் அடைந்தார். #PinarayiVijayan #Kerala #KeralaVotes
2. கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் சரிதா நாயர்
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக சரிதா நாயர் கூறியுள்ளார்.
3. கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து இரு சிறுவர்கள் காயம்
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடித்து இரு சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
5. பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
கேரளாவில் பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீஸ் கைது செய்தது.