தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு + "||" + Nirav Modi s Illegal Alibaug Bungalow Blown Up

மராட்டியத்தில் நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

மராட்டியத்தில் நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு
மராட்டியத்தில் நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். மராட்டியத்தின் அலிபாக் பகுதியில் கடற்கரையை ஒட்டி 33,000 சதுர அடியில் கட்டிய பங்களா,  கடற்கரை ஒழுங்குமுறை  மண்டலத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து பங்களாவை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் வெடிவைத்து தகர்த்துள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக இந்த பங்களா தகர்க்கப்பட்டுள்ளது.

வலிமையாக கட்டமைக்கப்பட்ட பங்களாவை அதிநவீன இயந்திரங்களை வைத்து இடித்தாலும் மாதங்கள் எடுக்கும், எனவே  வேலையை துரிதமாக முடிக்கவே உள்வெடிப்புமுறையை பயன்படுத்தி கட்டிடத்தை தகர்த்தோம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா, கர்நாடகா, மராட்டியத்தில் கடும் வெள்ள பாதிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பேர் பலி
கேரளா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. 3 மாநிலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு: 87 பேர் பலி
கேரளா, மராட்டியம், கர்நாடகாவில் கடுமையான வெள்ள பாதிப்பு நிலவுகிறது.
3. மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜனதாவில் சேருகிறார்கள்.
4. 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வேண்டும் மராட்டிய பா.ஜனதா தீர்மானம்
மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தலில் 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெற வேண்டும் என அம்மாநில பா.ஜனதா தீர்மானம் செய்துள்ளது.
5. ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் : நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.