தேசிய செய்திகள்

சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து குண்டை வீச செய்த பயங்கரவாத இயக்கம் + "||" + JK Jammu grenade thrower was paid Rs 50,000 by Hizbul

சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து குண்டை வீச செய்த பயங்கரவாத இயக்கம்

சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து குண்டை வீச செய்த பயங்கரவாத இயக்கம்
சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து ஜம்மு பஸ் நிலையத்தில் வெடிகுண்டை பயங்கரவாத இயக்கம் வீச செய்துள்ளது.
ஜம்மு, 

காஷ்மீரின் ஜம்மு பஸ் நிலையத்தில் நேற்று கையெறி குண்டு வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகளின் சதிச்செயல் காரணமா? என விசாரணை தொடங்கியது. போலீஸ் விசாரணையில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான், அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீஸ் அனுப்பியது. விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் சிறுவனை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

ரூ. 50 ஆயிரம் பணம் கொடுத்து குண்டை வீசச்செய்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. காஷ்மீரில் 2000-ம் ஆண்டில் நிலவிய நிலையை மீண்டும் பயங்கரவாதிகள் கையில் எடுத்துள்ளனர். சிறுவர்களின் கையில் வெடிகுண்டுகளை கொடுத்து வீசச்செய்துள்ளனர். பயங்கரவாத குழுக்கள் சிறுவர்களை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்துவதன் மூலம் சட்டத்தின் கடும் தண்டனையிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என கூறும் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
  
இந்த பஸ் நிலையத்தில் குண்டுவீசப்படுவது இது 3–வது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் குண்டுவீசப்பட்டதில் 2 போலீசார் உள்பட 3 பேர் காயமடைந்தனர். பின்னர் டிசம்பர் 28–ந் தேதி இரவும் பயங்கரவாதிகள் கையெறி குண்டு ஒன்றை வீசிச்சென்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் காஷ்மீரில் அரங்கேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
2. தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
ஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி
காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.
4. ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை - தலைமை செயலாளர்
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் கூறினார்.
5. காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.