மாநில செய்திகள்

தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைதலைமை தேர்தல் அதிகாரி தகவல் + "||" + The election rules have been violated In 1,548 cases Punishment for criminals

தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைதலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைதலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை, 

தேர்தல் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

குறைவான வாக்குப்பதிவு

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவதாவது:-

தேர்தல் நாளன்று வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போஸ்டர்களை, தமிழகத்தில் முக்கிய இடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வைக்க இருக்கிறோம்.

கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

53 பேருக்கு தடை

தேர்தலில் போட்டியிட்டு, தேர்தல் செலவுக்கணக்கை காட்டாத வேட்பாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். அந்த வகையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, செலவுக்கணக்கை காட்டாத 53 பேருக்கு, நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3,746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,957 வழக்குகளில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. அதில் 1,548 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 902 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 507 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி
பூந்தமல்லி அருகே வாகன சோதனையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
2. நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நாகையில் இருந்து திருச்சிக்கு 1,000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
3. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் 1,900 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், 1,900 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
4. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
5. மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,911 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.