மாநில செய்திகள்

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது + "||" + Bail Granted to Nirmala Devi

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

சாட்சியங்களை அழிக்க முயற்சிக்க கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், நிர்மலா தேவிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஆஜராகி நிர்மலா தேவி விளக்கம் அளித்துள்ளார்.
2. ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
3. நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
4. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.