உலக செய்திகள்

'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகள் அதிகரிப்பு + "||" + Australia bars all 737 MAX planes from its airspace

'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகள் அதிகரிப்பு

'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகள் அதிகரிப்பு
'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
எத்தியோப்பியாவில் கடந்த 10-ம் தேதி 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில்  விபத்துக்குள் சிக்கியுள்ளன. 

எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனையடுத்து  'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது.  எத்தியோப்பியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களை இயக்க அந்நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது '1,000 மணி நேரம்' அனுபவம் வேண்டும், துணை விமானிக்கு '500 மணி நேரம்' அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.  இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன. ஆணையத்தின் விதிகளுக்கு உடன்படுவோம் என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போது இவ்வகை விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கும் நாடுகள் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.  ஆஸ்திரேலியா, தென்கொரியா, மங்கோலியா போன்ற நாடுகளும் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதுபோன்று ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் முன்னெச்சரிக்கையாக இவ்வகை விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளது. சில நாடுகளில் விமானிகளும் இயக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
2. உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
3. ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகல்
காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார்.
4. ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: பலர் காயம் என தகவல்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...